குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நடிகை காயத்ரி ஷங்கர்

குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நடிகை காயத்ரி ஷங்கர்
குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நடிகை காயத்ரி ஷங்கர்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை காயத்ரி ஷங்கர். விஜய் சேதுபதியின் ‘ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜய் சேதுபதியின் அடுத்தப் படமான  ‘மாமனிதன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் ‘road to thumba’ என்ற குறும்படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தக் குறும்படத்தை தற்போது இந்தியன் ஃபிலிம் புராஜெக்ட் என்ற போட்டிக்கு சமர்ப்பித்து தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். தங்கம் வென்ற காயத்ரி ஷங்கர் தனது அடுத்த குறும்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். காயத்ரி ஷங்கரே நடித்துள்ள இப்படம் மெல்ஃபோர்ன் திரைபப்ட விழாவில் போட்டியிடுகிறது. தாய் மகள் பாசத்தைப் பற்றியக் கதை இது.

தங்கம் வென்றது குறித்து காயத்ரி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

   “கொரோனா தொற்றால் படப்பிடிப்பை துவங்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். என்னை நம்பி பணியாற்றிய எனது குழுவினருக்கு பாராட்டுக்கள். குறும்படங்கள் இயக்கியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமக இருந்தது. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோமோ அதற்கு பலனும் கிடைத்துள்ளது. எங்கள் குறும்படம் தங்கம் வென்றுள்ளது’ என்று பூரிப்புடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பன்முகத்திறைமை நிரூபித்துக்கொண்டிருக்கும் காயத்ரி ஷங்கர் பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தில் டப்பிங்கும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com