\
நடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..!

நடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..!

நடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..!
Published on

நடிகர் கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆட்டை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜ் இயக்கத்தில் விவசாயம் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. படத்தில், கார்த்தியுடன் ஆடு ஒன்று நடித்துள்ளது. அது, அப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த வீரசமர் என்பவருக்கு சொந்தமான ஆடு எனத் தெரிகிறது. சென்னை வளசரவாக்கத்தில் வீரசமர் வீட்டில்‌ கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி ஆடு காணாமல் போன‌தாகவும், ஆடு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க தன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com