\
அம்மாவானார் அசின்.. பெண் குழந்தை பிறந்தது..!

அம்மாவானார் அசின்.. பெண் குழந்தை பிறந்தது..!

அம்மாவானார் அசின்.. பெண் குழந்தை பிறந்தது..!
Published on: 

நடிகை அசின்-ராகுல் ஷர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின், தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தன.

இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும், அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தெரிவித்துள்ள ராகுல் ஷர்மா, “தேவதை போன்று குழந்தை பிறந்திருக்கிறாள். இதனை அறிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி. கடந்த 9 மாதங்களும் மிகவும் சிறப்பானது. மேலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் எங்களுக்குள் இருந்தன. எங்கள் மீது அளவில்லா அன்பு காட்டி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com