‘இன்று முதல் 3 நாட்களுக்கு தளபதி 64 அப்டேட்ஸ்’ - படக்குழு அறிவிப்பு
விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து அறிவிப்புகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் 63-வது படம் ‘பிகில்’. அட்லி இப்படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனிடையே விஜயின் அடுத்தப்படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
விஜயின் 64வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்தமாதம் படக்குழு வெளியிட்டது. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது. அதேபோல், படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தளபதி64 படம் குறித்த அறிவிப்புகள் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நாள்தோறும் மாலை 5 மணிக்கு வெளியாகும் என எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து என்ன அறிவிப்புகள் வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.