\
“இங்கேயும் அஜித் ரசிகரா?” - ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காயத்ரி

“இங்கேயும் அஜித் ரசிகரா?” - ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காயத்ரி

“இங்கேயும் அஜித் ரசிகரா?” - ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காயத்ரி
Published on

அஜித் ரசிகையாக நடிகை காயத்ரி மாறிய தருணத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகை காயத்ரி. சமீபத்தில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு கொழும்புவில் வேலைகளை முடித்து கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் உள்ளே ஏறும் வரை அவர் இயல்பாகவே இருந்துள்ளார். உள்ளே ஏறி அமர்ந்ததும் அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. 

அந்த ஆட்டோவின் உள்ளே நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒன்றை அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வைத்துள்ளார். அந்த போஸ்டரை பார்த்தவுடன் காயத்ரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இலங்கை நாட்டில் அஜித்திற்கு ரசிகரா? என கண்களை அகல விழித்து உச்சுக் கொண்டாடி உள்ளார். மேலும் அந்த ஆச்சர்யம் அகலாத புகைப்படத்தை அப்படியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ படத்தில் காயத்ரி நடித்து வருகிறார். இதற்கு முன் ‘சீதகாதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களில் அவர் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com