ஜூலியோ..? யாரோ..? போலீசில் புகார் செய்வேன்: காயத்ரி ரகுராம் காட்டம்

ஜூலியோ..? யாரோ..? போலீசில் புகார் செய்வேன்: காயத்ரி ரகுராம் காட்டம்

ஜூலியோ..? யாரோ..? போலீசில் புகார் செய்வேன்: காயத்ரி ரகுராம் காட்டம்
Published on

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றியோ அல்லது ஜூலி பற்றியோ அல்லது வேறு யார் பற்றியோ தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் போலீசில் புகார் அளிப்பேன் என காயத்ரி ரகுராம் காட்டமாக கூறியுள்ளார்.

நடன இயக்குநரான காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற ஜூலியும், காயத்ரியும் அடிக்கடி சண்டை போட்டது அனைவரும் அறிந்ததே. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் நல்ல நண்பர்களாவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “ சமூக வலைத்தளங்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றிக்கு இன்றே முடிவுகட்ட வேண்டும்.  கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலீசில் புகார் அளித்து தண்டனையை பெற்றுத் தருவேன். இந்தப் பிரச்னை எனக்கு மட்டுமல்ல.. ஜூலிக்கோ, அல்லது வேறு யாருக்கோ நிகழ்ந்தாலும் கூட தண்டனையை பெற்றுத் தருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com