\
வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் - உறுதி செய்த கவுதம் மேனன்!!

வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் - உறுதி செய்த கவுதம் மேனன்!!

வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் - உறுதி செய்த கவுதம் மேனன்!!
Published on: 

2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. காவல்துறை அதிகாரியாக நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து கவுதம் மேனன் பேசியுள்ளார். கமலிடம் மீண்டும் கதை குறித்து விவாதிக்க வேண்டும். ஏப்ரலில் இது நடக்கும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2 உருவாக வாய்ப்புள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் தெரிவித்த கவுதம் மேனன், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமலின் அறிமுக காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. அப்படி ஒரு மாஸ் காட்சியை இரண்டாம் பாகத்திலும் அமைக்க எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான செய்தி கவுதம் மற்றும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மீண்டும் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com