ப.பாண்டியின் 2-ம் பாகம் எடுங்கள்: கவுதம் வாசுதேவ் மேனன்

ப.பாண்டியின் 2-ம் பாகம் எடுங்கள்: கவுதம் வாசுதேவ் மேனன்

ப.பாண்டியின் 2-ம் பாகம் எடுங்கள்: கவுதம் வாசுதேவ் மேனன்
Published on

ப.பாண்டி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்குமாறு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ப.பாண்டி படம் கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல இயக்குநர்களின் பாராட்டை ஏற்கனவே பெற்றிருந்தது. இந்நிலையில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனனும் அந்தப் படத்தைப் பாராட்டியுள்ளதோடு, இரண்டாவது பாகத்தையும் எடுக்கச் சொல்லி இருக்கிறார்.

ப.பாண்டி படத்தின் கிளைமாக்சில் பிரிந்த பவர் பாண்டி, பூந்தென்றல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை அறிய ஆவலாக உள்ளதாக, கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். அதனால் பவர் பாண்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று நடிகர் தனுஷை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com