\
Gangai Amaran says on Singer S Janaki
Gangai Amaran, S janakix pager

”ட்யூன் கேட்டு கண்கலங்கினார்..” - எஸ்.ஜானகி மறைவு குறித்து கங்கை அமரன்!

பாடகி எஸ்.ஜானகி குறித்து இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் முன்னர் அளித்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

தமிழ் சினிமாவில், பழங்காலம் தொட்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, இன்று நம்முடன் இல்லை. அவர் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் நம்மை என்றும் உறங்காது வைத்திருக்கும். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பாடகி எஸ்.ஜானகி குறித்து இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் பிபிசிக்கு முன்னர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், “ ‘16 வயதினிலே’ படத்தில் அண்ணன் (இளையராஜா) இசையில் நான் எழுதிய ’செந்தூரப்பூவே’ பாடலை அவர்தான் பாடினார். இன்றும் அந்தப் பாடல் சாகாவரம் பெற்ற பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் இசையில், என் படங்களில் பல பாடல்களை ஜானகி அம்மா பாடியிருக்கிறார். என் இசையில் ’மெளனகீதங்கள்’ படத்தில் ’மூக்குத்தி பூ மேல காத்து’ எனக்குப் பிடித்த பாடல். அதேபோல், ’ஓடத்துல தண்ணீரு.. பெண்ணொருத்தி கண்ணீர்’ பாடலை என் இசையில் பாடிவிட்டு, வரிகள், ட்யூன் கேட்டு அவர் கண்கலங்கினார். அவரை, நான் ‘ஜானகி அம்மா’ எனப் பாசமாகத்தான் அழைப்பேன், அவரோ ’அமர்’ என்று என்னைச் செல்லமாக அழைப்பார். எங்கள் குடும்பத்துடன், எங்கள் இசையுடன் அவர் குரல் கலந்திருக்கிறது'' என அதில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com