ட்விட்டரில் ட்ரெண்ட்டான காந்தியவாதி விஜய்

ட்விட்டரில் ட்ரெண்ட்டான காந்தியவாதி விஜய்

ட்விட்டரில் ட்ரெண்ட்டான காந்தியவாதி விஜய்
Published on

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் பற்றி கூறிய ‘காந்தியவாதி விஜய்’ என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இயக்குநர் சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதன் முன்னோட்டக் காட்சிகள் வலைதளத்தில் வெளியாகியிருந்தது. அதில்,”விஜய்க்கு கோபமே வராது. ரொம்ப அமைதியானவர். ஆகவே அவர் காந்தியவாதி” என்று பொருள் கொள்ளத்தக்க தொனியில் எஸ்.ஏ.சி. பேசியிருந்தார்.

எஸ்ஏசியின் அந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பட்டு வருகிறது. கூடவே  ‘காந்தியவாதி விஜய்’ என்ற ஹேஸ்டாக் போட்டு ட்ரெண்ட்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.அதோடு எக்கச்சக்கமான மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள். அதோடு நடிகர் பிரபுதேவா உடன் விஜய் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ‘ஏய்..சைலண்ட்ஸ்’ என ஆக்ரோரமாக கத்தும் வீடியோ காட்சியை கிள்ளிப்போட்டு ’இவர் அமைதியானவரா?’என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com