முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்: ஜி.வி.பிரகாஷ் ட்விட்

முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்: ஜி.வி.பிரகாஷ் ட்விட்

முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்: ஜி.வி.பிரகாஷ் ட்விட்
Published on

முழுக் கருத்து சுதந்திரமே மிகச் சிறந்த ஜனநாயகம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

மெர்சல் விவகாரம் தமிழக அரசியல் வட்டத்தில் சூடுப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. மாநில அளவில் இருந்த இந்தப் பிரச்னை ராகுல் கருத்திற்குப் பின் தேசிய அளவிலான விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இசையில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படமும் வெளியீடுவதில் பல பிரச்னைகளை சந்தித்தது. அதோடு ஜி.வி. பிரகாஷ்  விஜய்யுடன் தோன்றி அந்தப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடனமாடியிருந்தார். அதுதான் பிரகாஷ் முதன்முதலாக திரையில் தோன்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com