முறிந்தது ஜெய்-அஞ்சலி காதல்: கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

முறிந்தது ஜெய்-அஞ்சலி காதல்: கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

முறிந்தது ஜெய்-அஞ்சலி காதல்: கோடம்பாக்கத்தில் பரபரப்பு!
Published on

இளம் ஜோடிகளாக வலம் வந்த ஜெய்-அஞ்சலி காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து அஞ்சலி அமெரிக்கா சென்றுவிட்டார்.

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், எங்கேயும் எப்போதும்’என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை. இந் நிலையில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

இது பற்றி ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, ‘நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ’மகளிர் மட்டும்’படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அஞ்சலியின் பிறந்த நாளன்று ஜெய் காதல் பொங்க அனுப்பிய வாழ்த்து பரபரப்பைக் கிளப்பியது.

இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. ’திடீரென்று ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து அஞ்சலி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்’என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com