புகைப்படத்தில் உறைந்த காலம்:  ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..!

புகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..!

புகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..!
Published on

மனித வாழ்க்கை முழுவதும் ஏதோவொரு நினைவுதான் நம்மை வழிநடத்துகிறது. அந்த நினைவுகளின் புகைபடிந்த நிகழ்வுகளை மீட்டெடுப்பதற்கு எப்போதோ பார்த்த படங்களும், எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் உதவியாக இருக்கின்றன. அப்படியொரு படம்தான் இது. ரஜினிகாந்த் கையில் இருக்கும் சிறுமி, இன்று பிரபலமான பாடகியாக உள்ள அனுராதா ஸ்ரீராம்.

காலத்தின் ரேகைகள் படிந்துள்ள அந்த கருப்பு வெள்ளை புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்தப் படத்தில் தெரியும் அதே சிரிப்பை இன்றும் சேமித்து வைத்திருக்கிறார் அவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ள அனுராதா, கர்நாடாக இசையிலும் வல்லமை பெற்றவராக இருக்கிறார்.

ஐம்பது வயதைத் தொடும் அவர் சிறுமியாக இருந்தபோது ரஜினியுடன் காளி படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காளி படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com