கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – லாஸ்லியா நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ டீசர் வெளியீடு!
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்வார். இதனால், அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.
இந்நிலையில், அவர் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் பிரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஹர்பஜன் சிங் ஆடிப்பாடி சண்டையிட்டு டீசரில் கவனம் ஈர்க்கிறார்.