\
’நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு வலை’ - நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் பெயரில் மோசடி

’நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு வலை’ - நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் பெயரில் மோசடி

’நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு வலை’ - நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் பெயரில் மோசடி
Published on

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 D ENTERTAINMENT பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி, லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிலர் விளம்பரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. GOOGLE PAY வாயிலாக ஒவ்வொரு நபரிடமும் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை அந்த மோசடி கும்பல் வசூல் செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி தொடர்பான ஆதாரங்களுடன் 2D ENTERTAINMENT நிறுவனம் சமூக வலைத்தள பக்கங்களிலும் அம்பலப்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com