களைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது

களைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது

களைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது
Published on

91 வருடமாக நடைப்பெற்று வரும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்கர் விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு அதிகமான பெண்களுக்கு விருது கிடைத்துள்ளது.

ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா ஒவ்வொரு வருடமும் இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால் பி தியேட்டரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி ஹாலிவுட் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்று பிரத்யேக உடைகளில் காட்சியளித்தனர்.

91-வது முறையாக நடைபெற்ற இந்த ஆஸ்கர் விழா தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடந்தது. ஆனால் Randy Thomas என்ற பெண் குரல் மூலமாக 91-வது ஆஸ்கர் விழா தொடங்கிவைக்கப்பட்டது. இவர் திரையில் தோன்றவில்லை என்றாலும் தன்னுடைய குரல் மூலம் ஆஸ்கர் விழாவை தொடங்கிவைத்தார்.

2018ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு 24 பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த துணை நடிகைக்கான விருது முதலில் வழங்கப்பட்டது. அந்த விருதை Tina Fey, Amy Poehler, Maya Rudolph ஆகியோர் இணைந்து Regina King-கிற்கு வழங்கினர். மேலும் திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது இந்த ஆண்டு 15 பெண்களுக்கு கிடைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் வரலாற்றிலேயே இத்தனை பெண்களுக்கு விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விழாவில் 28 சதவீதம் பெண்கள் பங்கேற்றதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு 12 பெண்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com