ஆஸ்கரை வென்ற ஐந்து வயதுக் குழந்தை

ஆஸ்கரை வென்ற ஐந்து வயதுக் குழந்தை

ஆஸ்கரை வென்ற ஐந்து வயதுக் குழந்தை
Published on

1934-ம் ஆண்டு ஐந்து வயது குழந்தையான ஷெர்லி டெம்பில் கெளரவ ஆஸ்கார் விருதை வென்றார். மிக சிறிய வயதில் ஆஸ்கர் வென்ற பெருமை இவரை சாரும்.

இதுபோல ஆஸ்கர் வென்ற இளம் நடிகை டாட்டம் ஓ நீல். இவர் 1974-ம் ஆண்டு தனது 10வது வயதில் ‘பேப்பர் மூன்’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்றார்.

கிறிஸ்டோபர் ப்ளம்மர் தான் ஆஸ்கார் விருது பெற்ற மிக வயது முதிர்ந்த நபர். இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை 2012-ம் ஆண்டு 82 வயதில் ’பிகினர்ஸ்’ என்ற படத்திற்காக பெற்றார்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்களில் வயது முதிர்ந்தவர் ஹென்றி ஃபோண்டா. 1982-ம் ஆண்டு தனது 72-ம் வயதில்’ஆன் கோல்டன் பாண்ட்’ படத்திற்காக அவர் இந்த விருதை வென்றார்.

இவரை விட வயது முதிர்ந்த ஒருவர் கூட ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அவர் ‘டைட்டானிக்’ படத்தில் ’பாட்டி ரோஸ்’ பாத்திரத்தில் நடித்த

குளோரியா ஸ்டூவர்ட். 1997-ஆம் ஆண்டில் 87 வயதில் பரிந்துரைக்கப்பட்ட இவர், ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மிக வயது முதிர்ந்த நபர். ஆனால் இவருக்கு விருது கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com