\
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியீடு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியீடு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியீடு
Published on

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியாகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துவிட்டன, மேலும் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள முதல் பாடலை நாளை மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழுவினர் நம்புகின்றனர். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com