\
வரும் 1-ஆம் தேதி வெளியாகிறது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் முதல் பாடல்

வரும் 1-ஆம் தேதி வெளியாகிறது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் முதல் பாடல்

வரும் 1-ஆம் தேதி வெளியாகிறது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் முதல் பாடல்
Published on

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 1-ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரப் போராட்ட வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு, எஸ்.எஸ்.ராஜமௌலியின், ஆஸ்தான இசையமைப்பாளரான கீரவாணி  இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் நட்புகுறித்த பாடலை ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் பாடியுள்ளனர். அதில் தமிழில் இடம்பெறும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பாடல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி 11 மணிக்கு வெளியாகும் என்று ஆர்.ஆர்.ஆர் படக்குழு அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com