first song of janamkayan will be released today evening
jana nayaganஎக்ஸ் தளம்

’ஜனநாயகன்’ முதல் பாடல்.. இன்று மாலை வெளியீடு!

விஜயின் ’ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு ’தளபதி கச்சேரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Published on
Summary

விஜயின் ’ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு ’தளபதி கச்சேரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு ’தளபதி கச்சேரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பாடல், இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் விஜய் குரலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

first song of janamkayan will be released today evening
வருகிறது `ஜனநாயகன்' முதல் சிங்கிள், பாடியிருப்பது விஜய் தானா...? | Jana Nayagan | Vijay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com