சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது? - வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது? - வெளியான அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது? - வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘டான்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ ஆகியப் படங்களை இயக்கிய அனூதீப்புடன் இணைந்து, தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘பிரின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடித்துள்ளார்.

சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். காரைக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், பின்னர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

ஏறக்குறைய படப்பிடிப்புகள் நிறைவடைந்தநிலையில், இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதேநேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்திற்கு தமன் இசைமையக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இன்னும் படம் வெளியாக இருமாதங்களுக்கும் குறைவாக இருப்பதால் தற்போதே படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட துவங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com