\
வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியீடு

வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியீடு

வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியீடு
Published on: 

வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே, போஸ்டர் தொடர்பான ஹெச்.டி படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது திரைப்படமான வலிமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புகைப்படம் என எதுவும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். அத்துடன் பல்வேறு பிரபலங்களிடமும்,  விளையாட்டு மைதானங்களிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ட்ரெண்டிங் ஆக்கினர்.

இந்த நிலையில் இன்று மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பெரும் விருந்தாகி இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் அஜித்தின் தோற்றம் கண்டு ரசிகர்களின் கொண்டாட்டம் குறையும்முன்பே, இப்படத்தில் அஜித்தின் வெவ்வேறு கெட்- அப்புகளில் அடுத்தடுத்த போஸ்டர்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் என மாறி மாறி வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர் போனிகபூர். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் இந்தப் படங்களை ரீட்வீட் செய்துவருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com