பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட ஃபர்ஸ்ட் லுக் - விஜய்சேதுபதி வெளியிட்டார்

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட ஃபர்ஸ்ட் லுக் - விஜய்சேதுபதி வெளியிட்டார்
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட ஃபர்ஸ்ட் லுக் - விஜய்சேதுபதி வெளியிட்டார்

இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் ரா. பார்த்திபன். இவர் 1989 ஆம் ஆண்டு புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். இந்த படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. அதன்பின்பு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்தி பாடுகிறேன் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட படங்களை தயாரித்து இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். 

இதனிடையே 1997 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தையும் 2017 ஆம் ஆண்டு கோடிட்ட இடங்களை நிரப்பவும் என்ற படத்தையும் தயாரித்து இயக்கி நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com