ஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்!

ஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்!

ஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்!
Published on

ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில், அதன் முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த யூனிஸ் கேய்சன் தனது 90வது வயதில் மரணமடைந்தார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான, டாக்டர் நோ (Dr No) 1962-ம் ஆண்டு வெளியானது. இதில் சீன் கானரி, ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக நடித்தவர் யுனிஸ் கேய்ஷன் (Eunice Gayson). இந்தப் படத்தில் அவரது கேரக்டர் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. படத்தின் புகழ்பெற்ற வசன உச்சரிப்பான ’பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்’ என்று சீன் கேனரி ஸ்டைலாக சொல்வதற்கு இவரது கேரக்டர்தான் காரணம். 

கதைப்படி ஓர் இடத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கும்போது சீன் கானரி, ‘உங்கள் தைரியத்தை மதிக்கிறேன் மிஸ்...’ என்பார். உடனே கேய்ஷன், ’டிரெஞ்ச், சில்வியா டிரெஞ்ச்...’ என்று தனது கேரக்டர் பெயரை நிறுத்திச் சொல்வார். இதையடுத்துதான் சீன் கானரி, ‘பாண்ட், ஜேம்ஸ்பாண்ட்’ என்று தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார். இப்படி சொல்வது பிறகு பிரபலமான ஒன்றாக மாறிப்போனது. 

’ஃபிரம் ரஷ்யா வித் லவ்’ (From Russia with Love) என்ற இரண்டாவது ஜேம்ஸ்பாண்ட் படத்திலும் இவரே ஹீரோயினாக நடித்திருந்தார். லண்டனில் வசித்து வந்த இவர், நேற்று காலமானார். அவருடைய உடலுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

லண்டனில் உள்ல சுர்ரேவில் 1928ம் ஆண்டில் பிறந்த கேய்ஷன், பாண்ட் படங்களுக்கு முன், தி ரிவெஞ்ச் ஆஃப் பிராங்கன்ஸ்டீன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com