\
’மனம்’ செட் சாம்பல், ரூ.2 கோடி நஷ்டம்: நாகார்ஜுனா தகவல்

’மனம்’ செட் சாம்பல், ரூ.2 கோடி நஷ்டம்: நாகார்ஜுனா தகவல்

’மனம்’ செட் சாம்பல், ரூ.2 கோடி நஷ்டம்: நாகார்ஜுனா தகவல்
Published on

ஐதராபாத் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்புள்ள செட் எரிந்து சாம்பலானது என்று நடிகர் நாகார்ஜூனா கூறினார்.

பிரபல நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ். தமிழ், தெலுங்கு இந்தியில் நடித்துள்ள இவரது மகன் நடிகர் நாகார்ஜுனா. இவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸில் அன்னப்பூர்ணா என்ற பிரமாண்ட சினிமா ஸ்டூடியோ உள்ளது.
பல அடுக்கு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட இந்த ஸ்டுடியோவில் நேற்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை அணைத்தன.

தீ விபத்து பற்றி நடிகர் நாகார்ஜுனா கூறும்போது, ‘தீ விபத்து நடந்த இடம், ’மனம்’ படத்துக்காக. ரூ.2 கோடியில் போடப்பட்ட பங்களா செட். இந்தப் படத்தில் நான், எனது தந்தை, என் மகன் நடித்திருந்தோம். ஐந்து வருடத்துக்கு முன் போடப்பட்ட அந்த செட், முழுவதுமாக எரிந்துவிட்டது. இதில் வேறு சில படங்களின் படப்பிடிப்புகளும் நடந்துவந்தன. தீ விபத்து ஏற்பட்டபோது ஆட்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த செட் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பது பற்றி தெரியவில்லை’ என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com