விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி
விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவிX

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவு.. குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த 'இராவண கோட்டம்' தயாரிப்பாளர்!

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற தனித்துவமான படைப்புகளால் கவனம்பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைந்த செய்தி தமிழ்திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதோடு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராகவும் அறிமுகமான அவர், சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படத்திலும் நடித்துள்ளார். ஆடுகளம் படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனமும் எழுதியுள்ளார்.

விக்ரம் சுகுமாரன்
விக்ரம் சுகுமாரன்

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்த விக்ரம் சுகுமாரன், தன்னுடைய சிறந்த படைப்பால் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து, நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு, ‘இராவணக்கோட்டம்’ படத்தை இயக்கியிருந்தார்.

இந்த சூழலில் நெஞ்சு வலி ஏற்பட்டு விக்ரம் சுகுமாரன் உயிரிழிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 லட்சம் நிதியுதவி வழங்கிய தயாரிப்பாளர்..

மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உயிரிழந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் வசித்துவருகின்றனர்.

ஒரு சிறந்த திரைப்பட கலைஞனின் இறப்பு தமிழக் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சூழலில் உயிரிழந்த விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார் ‘இராவண கோட்டம்’ தயாரிப்பாளர் கண்ணன் ரவி. விக்ரம் சுகுமாரன் தாயாரிடம் காசோலையை வழங்கினார் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி. காசோலையை வழங்கிய போது நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com