இந்தி ஹாரார் பட இயக்குனர் துளசி ராம்சே காலமானார்

இந்தி ஹாரார் பட இயக்குனர் துளசி ராம்சே காலமானார்

இந்தி ஹாரார் பட இயக்குனர் துளசி ராம்சே காலமானார்
Published on

இந்தி சினிமாவில் பல ஹாரர் படங்களை இயக்கிய துளசி ராம்சே நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

இந்தி சினிமாவில் ராம்சே சகோதரர்கள் பிரபலமானவர்கள். ஏழு சகோதரர்களான இவர்கள் அனைவரும் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் ஒருவர் துளசி ராம்சே.80 மற்றும் 90-களில் ஏராளமான இந்தி ஹாரார் படங்களை இயக்கியவர் துளசி ராம்சே. இவர் இயக்கிய ஹோட்டல், புரானா மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா உட்பட பல படங்கள் புகழ்பெற்றவை. டி.வி.சீரியல்களையும் இயக்கி வந்தார். சில படங்களையும் தொடர்களையும் தயாரித்தும் வந்தார்.

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வந்த அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com