விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்!

விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்!
விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்!

மும்பை விமான நிலையத்தில் கீழே விழுந்த ’மகாபாரதம்’ படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் மேனன். விளம்பர படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் இயக்கிய பல விளம்பர படங்கள் புகழ்பெற்றவை. அதில் ஒன்று கல்யாண் ஜூவல்லர்ஸ். இவர் இப்போது மோகன்லால், பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர் நடித்துள்ள 'ஒடியன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

(ஒடியான் படத்தில் மோகன்லால்)

பேண்டஸி த்ரில்லர் படமான இது இந்தப் படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்பை மற்றும் சென்னையில் நடந்து வருகிறது.

படத்தின் வேலைக்காக மும்பை சென்றிருந்த இவர், கடந்த 17 ஆம் தேதி கொச்சி திரும்ப முடிவு செய்திருந்தார். மும்பை விமான நிலையம் வந்த அவர், எஸ்கலேட்டரில் ஏறினார். அப்போது நிலைதடுமாறி தலைகுப்புற கீழே விழுந்தார்.

இதில் அவர் முகத்தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் பலமாக இருப்பதால் அவர் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்தான், பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தைத் தழுவி எழுதியுள்ள ’ரெண்டாமூழம்’ நாவலை படமாக இயக்க இருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகும் இந்தப் படத்தில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். பீமனின் பார்வையில் மகாபாரதத்தைச் சொல்வது போல கதை அமைக்கப் பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com