விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்
கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காததால், திண்டுக்கல்லில் நடைபெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத படக்குழுவினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு, படக்குழுவில் இருந்த நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம், நடிகர் விஜய்சேதுபதி சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத படக்குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.