விஷால்புதிய தலைமுறை
சினிமா
விஷால் தலைவராக இருந்தபோது விதிமீறல் நடந்ததா..? ரூ.8 கோடி விதிகளை மீறி செலவு!
விஷால் தலைவராக இருந்தபோது ரூ.8 கோடி விதிகளை மீறி செலவானதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.. வைப்புத்தொகை விவகாரம் குறித்து விசாரண நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..
நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது, 8 கோடி ரூபாய் வைப்புத்தொகையை விதிகளை மீறி செலவு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், சங்கத்தின் வைப்பு நிதி தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
அதுகுறித்து பதிலளித்த நிர்வாகிகள், இதில் முறைகேடோ, கையாடலோ நடக்கவில்லை என்றும், அதற்கான கணக்கு வழக்கு உள்ள நிலையில், விசாரணை நடத்தி மீட்க நடவடிக்கை எடுக்க, குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர். அந்த குழுவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரே தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

