300 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் கர்நாடக சினிமா தயாரிப்பாளரும் கூட்டுறவு சொசைட்டி சேர்மனுமான ஆனந்த் அப்புகொல் கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், ஜெயப்பிரதா, நிகிதா உட்பட பலர் நடித்து கன்னடத்தில் வெற்றிபெற்ற படம், ‘சங்கொலி ராயண்ணா’. கர்நாடக சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையான இதை நாகண்ணா இயக்கியிருந்தார். இந்தப் படம் 2012-ம் ஆண்டு வெளியானது. ஆனந்த் அப்புகொல் தயாரித்திருந்தார். இவர், சங்கொலி ராயண்ணா கூட்டுறவு சங்கத்தின் சேர்மனாகவும் இருக்கிறார்.
இந்த சங்கத்தில் முதலீடு செய்யப்பட்ட 300 கோடி ரூபாயை அவர் சுருட்டிவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. இவருக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெலகாவியில் போராட்டமும் நடந்தது. இந்நிலையில் அவரை பெலகாவி போலீசார், மும்பையில் கைது செய்தனர்.