பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்!

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்!

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்!
Published on

பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா மும்பையில் இன்று காலமானார். 

ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக, ஏராளமான படங்களைத் தயாரித்து வந்தவர் ராஜ்குமார் பர்ஜத்யா. தபாஸியா, சிட் சோர், சாரான்ஷ், சல்மான் கான் நடித்த மைனே பியார் கியா, ஹம் ஆம்கே ஹெய்ன் கோன், ஹம் சாத் சாத் ஹெய்ன், விவா, ப்ரேம் ரதன் தான் பயோ உட்பட ஏராளமான ஹிட் படங்கள் இவர்கள் தயாரிப்பில் அடங்கும். இவர் தயாரித்த ஹம் ச்சார் என்ற படம் கடந்த 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், இன்று காலை மரணமடைந்தார். மறைந்த ராஜ்குமாருக்கு சுதா என்ற மனைவியும் சூரஜ் பர்ஜத்யா என்ற மகனும் உள்ளனர். சூரஜ், மைனே பியார் கியா, ஹம் ஆம்கே ஹெய்ன் கோன் உட்பட சில படங்களை இயக்கி யுள்ளார். தயாரித்தும் வருகிறார். 

ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸை, ராஜ்குமாரின் தந்தை தாராசந்த் பர்ஜத்யா 1947 ஆம் ஆண்டு தொடங்கினார். குடும்ப படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பட நிறுவனம் ஆரம்பத்தில் அது போன்ற படங்களை மட்டுமே தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த ராஜ்குமார் பர்ஜத்யா இறுதிச்சடங்கு நாளை நடக்கும் என்று தெரிகிறது. அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com