பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் திரையுலகம்!
திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலைத் தீயணைப்புத் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது மகன் K.R.பிரபு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 1983ஆம் ஆண்டு சுரேஷ் நடித்த ’பிரம்மச்சாரிகள்’ என்ற படம் மூலம் கே.ராஜன் தயாரிப்பாளராக தனது திரை வாழ்வைத் தொடங்கினார்.
1991ஆம் ஆண்டு நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடித்த ’நம்ம ஊரு மாரியம்மா’ திரைப்படத்தை இயக்கினார். சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியையும் ஏற்றிருந்தார். தமிழ் சினிமா குறித்து தனது கருத்துகளைக் துணிச்சலுடன் மேடையில் பேசியவர். இந்த நிலையில், எதிர்பாராமல் அவர் எடுத்த இந்த துயர் முடிவு தமிழ் திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

