\
நடிகை ஸ்ரீதேவி கணவர் டிவிட்டரும் திருட்டு: போலீசில் புகார்

நடிகை ஸ்ரீதேவி கணவர் டிவிட்டரும் திருட்டு: போலீசில் புகார்

நடிகை ஸ்ரீதேவி கணவர் டிவிட்டரும் திருட்டு: போலீசில் புகார்
Published on: 

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அது தொடர்பாக அவர்கள் புகார் செய்து வருவதும் அதிகரித்துவருகிறது. சமீபத்தில் பாடகி சுசித்ராவின் கணக்குத் திருடப்பட்டு அதில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகைகளின் தனிப்ப்பட்ட படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து, இளைஞர் ஒருவர் பணம் பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மும்பை, பாந்த்ராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் போனி கபூர் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com