வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?

வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?

என்பதுகளில் பிறந்தவர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம், அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

80-களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி வைத்திருந்த நடிகை குஷ்பு, நதியா ஆகியோர் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அதே இளமை தோற்றத்துடனே இருந்து வந்தனர். கொரோனாவுக்கு பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய நடிகை குஷ்பு, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். உடல் மெலிந்த அவரது புகைப்படங்களை கண்டு அவருக்கு உடல்நல பாதிப்பா? என பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், 20 கிலோ எடையை குறைத்ததாகவும், தமது உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி கடந்த ஆண்டு இறுதியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில், தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சிலர் குஷ்பூவின் புதிய கெட்டப்-க்கு ஆதரவு தெரிவிக்க, பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

உருவக் கேலிக்கு உள்ளான பிரபலங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்...

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலிகள் அதிகரித்து சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கு வெளியேயும் இப்படி உருவக் கேலிக்கு ஆளானவர்களைச் சொல்ல முடியும். உயரம் குறைந்தவர் என சூர்யாவும், ஒல்லியான தேகத்தால் தனுஷும் உருவக் கேலிக்கு ஆளாகியுள்ளனர்.

நடிகைகளில் உடல் எடை காரணமாக ஸ்ரீப்ரியா, குஷ்பு, ஹன்சிகா, சமீரா ரெட்டி, சனுஷா, சுவாதி, வித்யுலேகா, பிரியங்கா போன்றோரும், நிறம் காரணமாக குணச்சித்திர நடிகை தீபாவும், உருவம் காரணமாக யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயையும் உருவக் கேலி விட்டுவைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. குண்டாக இருப்பதால் உருவ கேலிக்கு ஆளான குஷ்பு தற்போது உடல் இளைத்து காணப்பட்டாலும், இந்த வயதில் இது தேவையா என்றும் சிலர் விமர்சிப்பது நிச்சயம் நகைச்சுவையல்ல.

உருவக் கேலியை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கும் வாய்ப்புகள் குறித்த தகவல்களை பார்க்கலாம். பெண்களை உருவக் கேலி செய்தால், ஐபிசி 509-வது பிரிவு, ஐபிசி 294-வது பிரிவு, ஐபிசி 354-வது பிரிவு உதவுகிறது. இதேபோல் பெண்களை ஆபாசமாக பேசுவது, இழிவாக நடப்பது, ஈவ் டீசிங் செய்தால், ஐபிசி 509-வது பிரிவு, ஐபிசி 294-வது பிரிவு உதவுகிறது. அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஐபிசி 354-வது பிரிவு உதவுகிறது. மேலும் விரிவான பல தகவல்களை நியூஸ் 360 டிகிரி வீடியோவில் முழுமையாகக் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com