மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி

சென்னையில் பின்னணி பாடகி பவதாரிணியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்
தேனி எடுத்துச் செல்லப்படும் பவதாரிணி உடல்
தேனி எடுத்துச் செல்லப்படும் பவதாரிணி உடல்pt web

இளையராஜாவின் மகளான பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கையில் காலமானார். அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. விமானநிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பவதாரிணி
பவதாரிணிட்விட்டர்

இதேபோல் நடிகர்கள் சிவக்குமார், ராமராஜன், கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தோட்ட வளாகத்தில் தாய் மற்றும் பாட்டியின் சமாதிகள் அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com