கொரோனா யுத்தம் - 4 கோடி ரூபாய் கொடுக்கும்  பிரபாஸ்...!

கொரோனா யுத்தம் - 4 கோடி ரூபாய் கொடுக்கும் பிரபாஸ்...!

கொரோனா யுத்தம் - 4 கோடி ரூபாய் கொடுக்கும் பிரபாஸ்...!
Published on

நடிகர் பிரபாஸ், கொரோனா நிவாரண நிதியாக 4 கோடி ரூபாய் கொடுக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் இருந்து 24,000 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இருந்து பரவத் துவங்கிய இந்நோய் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி கொடூரமான தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இந்தியா 21 நாள் ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. கொரோனா குறித்து நாட்டு மக்களுடன் இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.

இச்சூழலில் இருந்து தேசம் மீண்டு எழ கை கொடுத்து உதவத் தொடங்கியிருக்கிறார்கள் சினிமா பிரபலங்கள். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸ் 4 கோடி ரூபாயினை, இந்நெருக்கடி கால நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக தெரிகிறது. தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாயினை வழங்கும் பிரபாஸ் 3 கோடி ரூபாயினை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாஸ் தவிர ராம் சரண் 70 லட்ச ரூபாயும், பவன் கல்யாண் 2 கோடி ரூபாயும், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோர் தலா 1 கோடியும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com