ஃபெஃப்சி தொழிலாளர்கள் பிரச்னை: முத்தரப்பு பேச்சுவார்தையில் உடன்பாடு இல்லை
ஃபெஃப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பான முதற்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஃப்சி தொழிலாளர்கள் இல்லாததால் ஏராளமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, ஃபெப்சி தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புவதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி நேற்று அறிவித்தார். ரஜினி உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கம்போல் இன்று படப்பிடிப்பு துவங்கியது.
இதனிடையே, ஃபெஃப்சி தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெஃப்சி சம்மேளன நிர்வாகிகள், அரசுத் தரப்பு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.