மரண தண்டனையே பயம் தரும் - நடிகர் விவேக்

மரண தண்டனையே பயம் தரும் - நடிகர் விவேக்

மரண தண்டனையே பயம் தரும் - நடிகர் விவேக்
Published on

குழந்தைகள் பலாத்காரம் தொடர்கதையாகி வருவதாக நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ‌வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருகின்றன. இந்த நிலையில் குழந்தைகள் பலாத்காரம் தொடர்கதையாகி  வருவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘குழந்தை பலாத்காரம் தொடர்கதையா ? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க !’ என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com