\
தேவா - ஸ்ரீகாந்த் தேவா
தேவா - ஸ்ரீகாந்த் தேவாpt

தந்தை ’தேவா’ திடீர் உயிரிழப்பு.. கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா!

இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத்தென்றல் தேவா 76வது வயதில் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
Published on: 
Summary

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா திடீர் மரணமடைந்தார். அவரது மரண செய்தி கேட்டு மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுத காட்சி மனதை நொறுக்கும்விதமாக அமைந்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவின் இழப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பாகும்.

தேனிசைத் தென்றல் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. எளிய மக்களின் இசையால் மனதிற்கு நெருக்கமான இசையை கொடுப்பதால் எப்போதும் எளிய மனங்களுக்கு நெருக்கமானவராக இருந்தவர். 1990ஆம் ஆண்டு இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் புகழ்பெற்ற தேவா, கானா என்ற எளிய மக்களின் குரலை பாடலாக ஒலிக்கவிட்டு சாமான்ய மக்களுக்கு நெருக்கமானவர்.

தேனிசைத் தென்றல் தேவா
தேனிசைத் தென்றல் தேவா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் தேவா, ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, பாட்ஷா என்ற காலத்திற்கும் அழியாத படங்களை கொடுத்தவர். அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டை, வாலி, விஜய்க்கு நினைத்தேன் வந்தாய், குஷி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கமலுடன் அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் போன்ற படங்களுக்கும், விஜயகாந்த் உடன் என் ஆசை மச்சான், செந்தூரபாண்டி, சொக்கத்தங்கம், வீரம் விளைஞ்ச மண்ணு, கள்ளழகர் போன்ற படங்களில் மறக்கமுடியாத பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்தசூழலில் தான் திடீரென மராடைப்பு ஏற்பட்டதால் இன்று காலை 10.30 மணியளவில் தேவா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. காலை 8.30 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் மருத்துவமனை வாசலில் தந்தையின் மரணசெய்தி கேட்டு மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுத காட்சி மனதை நொறுக்கும்விதமாக அமைந்துள்ளது. தேவாவின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தேவா - ஸ்ரீகாந்த் தேவா
தேனிசைத் தென்றல் ’தேவா’ உடல்நலக்குறைவால் காலமானார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com