ஹாலிவுட் திரைப்படமான தி ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ் வெளியான மூன்று நாட்களில் 3 ஆயிரத்து 341 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் 8ஆம் பாகமான ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ், உலகளவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களில் 3 ஆயிரத்து 431 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ஜூராஸிக் வேர்ல்ட் திரைப்படம் வசூலித்த 2 ஆயிரத்து 41 கோடி ரூபாயே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் என்ற சாதனையையும் ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ் படைத்தது.

