சினிமா
'வக்கீல்சாப்' டிரைலரை காண கண்ணாடி கதவை உடைத்து திரையரங்கில் நுழைந்த ரசிகர்கள்!
'வக்கீல்சாப்' டிரைலரை காண கண்ணாடி கதவை உடைத்து திரையரங்கில் நுழைந்த ரசிகர்கள்!
பவன் கல்யாண் நடித்துள்ள 'வக்கீல்சாப்' படத்தின் டிரைலரைக் காண , கூடிய ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு திரையரங்கிற்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம், தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன் கல்யாண், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர், விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஒரேநேரத்தில் திரையரங்கிற்குள் செல்ல முயற்சி செய்தனர். கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு ரசிகர்கள், திரையரங்கிற்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.