cinema shooting
cinema shootingpt desk

காஞ்சிபுரம் - படப்பிடிப்புக்காக வந்த நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள்... கடும் போக்குவரத்து பாதிப்பு

சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நயன்தாராவை பார்க்க குவிந்த ரசிகர்கள்; கடும் போக்குவரத்து பாதிப்பு
Published on

செய்தியாளர் - இஸ்மாயில்

________

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது ஜீரகேஸ்வரர் திருக்கோயில். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், நடிகர் மாதவன், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்pt desk

இதில் கலந்து கொள்ள திரைப்பட நடிகையும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவருமான நடிகை நயன்தாரா வந்திருந்தார். இதை அறிந்த அப்பகுதி ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் நயன்தாராவை காண வேகவேகமாக கோயில் முன்பு குவிந்தனர். அந்தநேரத்தில் மழையும் பெய்யத்தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் திருக்கோயிலில் இருந்து வெளியேறிய நயன்தாராவை காவல் துறையினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் பத்திரமாக கேரவனுக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com