யாரு கெத்து? - டோலிவுட் Vs கோலிவுட்... ட்விட்டரில் ஹேஷ்டேக் யுத்தம்!

யாரு கெத்து? - டோலிவுட் Vs கோலிவுட்... ட்விட்டரில் ஹேஷ்டேக் யுத்தம்!

யாரு கெத்து? - டோலிவுட் Vs கோலிவுட்... ட்விட்டரில் ஹேஷ்டேக் யுத்தம்!
Published on

தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள டோலிவுட் vs கோலிவுட் சண்டை, திரையுலகில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

ட்விட்டரில் அவ்வப்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பதிவுகளாலும் மீம்களாலும் பரஸ்பரம் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால் இன்று மற்றொரு விஷயத்தில் நெட்டிசன்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அது, டோலிவுட் Vs கோலிவுட் சண்டைதான்.



தெலுங்கு ரசிகர்கள் #TwoodDominatingsouth என்ற ஹேஷ்டேக்குடன் தெலுங்கு படங்கள் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சுகின்றன என்ற தொடர்ச்சியாக ட்வீட்களை பதிவு செய்தனர். இதில் டென்ஷனான தமிழ் திரைப்பட ரசிகர்கள் #KwoodDominateIndia என்ற ஹேஷ்டேக்கை போட்டியாக பதிவு செய்தனர். இதனால் சிறிது நேரங்களில் விரைவில் இந்தியா ட்ரெண்டிங்கில் இடம்பெற தொடங்கியது.

முதலில் இந்த பிரசாரத்தை முன்னெடுத்தது தெலுங்கு நெட்டிசன்கள்தான் என்றாலும் போகப் போக இதனை தமிழ் நெட்டிசன்கள் கையிலெடுக்க தொடங்கினர். இதனால், மாலையில் கோலிவுட் ரசிகர்களின் ட்வீட்கள் 1,23,000-ஐ கடந்து சென்றுகொண்டிருந்தது. தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்கள் மற்றும் சிறந்த படங்களை இவர்கள் தொடர்ந்து பதிவிட்டனர். இந்த இரு திரையுலகை சேர்ந்த ரசிகர்களின் இந்த திடீர் ட்வீட் சண்டையால் ட்விட்டர் இன்று ரணகளம் ஆனது. அதேநேரம் சிலர் இதனை தேவையில்லாத வேலை என்றும் விமர்சித்து பதிவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், "இன்று ட்விட்டரில் #Tollywood Vs #Kollywood என சண்டை போடும் மேதைகளுக்கு, ஒரு சிறிய தகவல். நெட்ஃபிக்ஸ் அனைத்து சினிமா துறையையும், நெட்ஃபிக்ஸ்_இன் சவுத் என இணைத்துள்ளது. முதலில் அதை மாற்றுவோம். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த இடம் கொடுக்கப்பட வேண்டும்" என தற்போது காட்டமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com