மிரட்டலாக வந்த ‘தி கிரே மேன்’ கிளிம்ப்ஸ் வீடியோ - சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்

மிரட்டலாக வந்த ‘தி கிரே மேன்’ கிளிம்ப்ஸ் வீடியோ - சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்
மிரட்டலாக வந்த ‘தி கிரே மேன்’ கிளிம்ப்ஸ் வீடியோ - சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும், ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ கிளிம்ப்ஸ் வீடியோவில், தனுஷ் கதாபாத்திரம் காண்பிக்கப்படாததால், அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்தவகையில், ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ‘தி கிரே மேன்’ படத்தை ஜூலை மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

‘கர்ணன்’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றார் தனுஷ். இந்நிலையில் இந்தப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் நேற்றிரவு மிரட்டலாக வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, உலக அளவில் ட்ரெண்ட் ஆன இந்த க்ளிம்ப்ஸ் காட்சிகளில் தனுஷ் தொடர்பான காட்சிகள் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் சம்பந்தமான காட்சிகளை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com