\
மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்த ரசிகை... பணியை விட்டு நீக்கியதால் உதவ கோரிக்கை!

மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்த ரசிகை... பணியை விட்டு நீக்கியதால் உதவ கோரிக்கை!

மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்த ரசிகை... பணியை விட்டு நீக்கியதால் உதவ கோரிக்கை!
Published on: 

நடிகர் அஜித் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது அதனை வீடியோ எடுத்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஜித்தின் மேலாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த அப்பெண், தனக்கு மீண்டும் பணி கிடைக்க உதவ வேண்டும் எனவும் கோரி வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அஜித்தின் ரசிகையான சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த பர்சானா, அஜித் மருத்துவமனைக்கு வருவதை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இந்தப்புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்தநிலையில் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகம் பின்னர் பணியில் இருந்தே நீக்கியது. இதனால் வருமானம் இன்றி தவித்த பர்சானா, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தனது நிலையைச் சொல்லி உதவக் கோரிக்கை வைத்தார். பின்னர் தனக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டு, பின் வாங்கியதாக அஜித்தின் மேலாளர் மீது காவல்நிலையத்தில் பர்சானா புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com