\
பிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்

பிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்

பிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்
Published on

பிரபல பஞ்சாபி பாடகர் பர்மிஷ் வெர்மா, அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார்.

பிரபல பஞ்சாப் பாடகர் பர்மிஷ் வெர்மா. இவர் நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மொகாலி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். இந்த தகவலை மொகாலியின் மூத்த எஸ்பியான குல்தீப் சாஹலும் உறுதி செய்துள்ளார். சுடப்பட்டதில் வெர்மாவின் காலின் குண்டு பாய்ந்திருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வெர்மாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com