பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்!
Published on

பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 54.

அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com