பழம்பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்.
1929ஆம் அக்டோபர் 31ஆம் தேதி தஞ்சாவூரில் வெங்கடச்சாரியார் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் முக்தா சீனிவாசன்.
இவர் இளமை காலத்தில் பொதுவுமைக் கட்சியில் அரசியல் பணியாற்றினார். பின்பு தேசிய காங்கிரஸில் இணைந்தார். அதுமட்டுமின்றி
பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். ரஜினிகாந்த நடித்த பொல்லாதவன், ஜெயலலிதாவின்
100வது திரைப்படமான சூரியகாந்தி உட்பட தமிழில் 40 படங்களை இயக்கியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் இயக்கிய முதலாளி என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது 88 வயதான சீனிவாசன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் காலமானார்.