சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரபல நிறுவனம்
Published on

ரெமோவை தொடர்ந்து வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. 

ரெமோ வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வேலைக்காரன். இயக்குநர் மோகன் ராஜாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்தியது. அனிரூத் - சிவகார்த்திகேயன் கூட்டணி என்றாலே பாடல்களுக்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான ரெமோ படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் வேலைக்காரன் படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதனால் பாடல் உரிமைகளை பெற பெரிய நிறுவனங்கள் மத்தியில் போட்டி நிலவியது. இதையடுத்து படத்தின் ஆடியோ உரிமையை பிரபில சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  

இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனம், சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளது. ரெமோ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனமே மீண்டும் அனிரூத் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையையும் கைப்பற்றியுள்ளது.     


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com